பத்தாம் வகுப்பு: ஜூன் 14 இல் மதிப்பெண் பட்டியல்!
வெள்ளி, 30 மே 2008 (11:37 IST)
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 14 அன்று பள்ளி மாணவ மாணவியருக்கு அவரவர் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு ஜூன் 14 முதல் 17 வரை அவரவர் தேர்வெழுதிய மையங்களிலும் வழங்கப்படும்.
இத்தகவலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று தெரிவித்தது.
மறுகூட்டல்:
தேர்வெழுதிய பாடங்களில் மறுகூட்டல் கோருவதற்கான விண்ணப்பங்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, கடலூர், வேலூர் ஆகிய அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களில் ஜூன் 3 முதல் 6 வரை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேற்கூறப்பட்ட அலுவலகங்களில் ஜூன் 6 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
மறுகூட்டலுக்கான கட்டணம், ஒரு தாள் கொண்ட பாடத்திற்கு ரூ.205 (ஒவ்வொரு பாட்திற்கும்), இரு தாள் கொண்ட பாடத்திற்கு ரூ.305 (ஒவ்வொரு பாடத்திற்கும்).