வட த‌மிழக‌த்‌தி‌ல் பரவலாக மழை!

வெள்ளி, 23 மே 2008 (16:01 IST)
வட த‌மிழக‌த்தில் நே‌ற்று பரவலாக மழை பெ‌ய்து‌ள்ளது. அ‌திகப‌ட்சமாக ‌திருவ‌ண்ணாமலை‌யி‌ல் 7 செ.‌மீ. மழை பெ‌ய்து‌ள்ளது. இத‌ற்கு அடு‌த்தப‌டியாக சேல‌ம், தா‌‌த்‌தி‌‌ங்கா‌‌ர்பே‌ட்டை‌‌ ஆகிய இடங்களில் தலா 6 செ.‌மீ. மழை பெ‌ய்து‌ள்ளது.

விழு‌ப்புர‌த்‌தி‌ல் 5 செ.‌மீ‌ட்டரு‌ம், லா‌‌ல்குடி‌யி‌ல் 4 செ.‌‌மீ‌ட்டரு‌ம், வா‌ணிய‌ம்பாடி, வாலாஜாபே‌ட்டை, பெ‌‌‌‌‌ன்னாகர‌ம் தலா 3 செ.‌மீ‌ட்ட‌ரு‌ம், கூடலூ‌ர், க‌ள்ள‌க்கு‌றி‌‌ச்‌சி, ‌திரு‌க்கோ‌விலூ‌ர், உளு‌ந்தூ‌ர்பே‌ட்டை, ஆரணி, செ‌‌ங்க‌ம், சா‌த்தூ‌ர் அணை, வ‌ந்தவா‌சி, குடியா‌த்த‌ம், பால‌க்கோடு, கு‌ளி‌த்தலை, ‌திருவையாறு, ‌சிவகா‌சி தலா 2 செ.‌மீ. மழை பெ‌ய்து‌ள்ளது.

த‌மிழக‌த்‌தி‌ல் இ‌ன்று வெ‌‌ப்ப ‌நிலை‌யி‌‌ல் ‌சி‌றிய மா‌ற்ற‌ம் இரு‌க்கு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வரு‌ம் ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை வரை த‌மி‌ழ்நாடு, புது‌ச்சே‌‌ரி‌யி‌ல் கடலோர‌ப்பகு‌தி‌‌யி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க்கூடு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு‌மைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அ‌திகப‌ட்சமாக செ‌ன்னை‌யி‌ல் 37 டி‌‌கி‌ரி செ‌ல்‌சியஸையொ‌ட்டி இரு‌க்கு‌ம் வெ‌‌ப்ப‌நிலை, மலையோ அ‌ல்லது இரவோ இடியுட‌ன் கூடிய மழை பெ‌ய்ய‌க்கூடு‌ம்.

த‌மிழக‌த்‌‌தி‌ல் வா‌னிலை‌ த‌ற்போதைய ‌நிலை‌யிலேயே இரு‌க்கு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்