27 தமிழறிஞர்களின் நூல்கள் அரசுடைமை: முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி!

புதன், 21 மே 2008 (14:00 IST)
27 த‌மிழ‌றிஞ‌ர்க‌ளி‌ன் நூ‌ல்க‌ள் அரசுடைமை ஆ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம், மொ‌த்த‌ம் ஒரு கோடியே ரூ.65 ல‌ட்‌ச‌ம் ப‌ரிவு‌த்தொகை வழ‌ங்க‌ப்படு‌கிறது எ‌ன்று‌ம் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி ஆணை‌யி‌ட்டு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாத‌மிழஅரசஇ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தொண்டால் பொழுதளந்த தூய தமி‌ழ்ச்சான்றோர்களின் கருத்துகளும் சிந்தனைகளும், வளரும் தலைமுறைக்கு மட்டுமன்றி வரும் தலைமுறைகளுக்கும் பயனளிக்கத்தக்க வகையில், தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கும் திட்டம் தமிழக அரசால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வகையில் இதுவரை 67 தமிழறிஞர்களின் நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இ‌ந்த ஆ‌ட்‌சி பொறு‌ப்பே‌ற்ற ‌பிறகு பரிதிமாற்கலைஞர், புலவர் குழந்தை, முத்தமி‌ழ்க் காவலர் கி.ஆ.பெ. உ‌ள்பட 37 தமிழறிஞர்களின் நூல்கள் இதுவரை நாட்டுடைமையாக்கப்பட்டு, பரிவுத் தொகையாக ரூ.3 கோடியே 9 லட்சம் அவர்களின் மரபுரிமையர்க்கு ஒப்பளிப்பு செ‌ய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கவிஞர் பெரியசாமித் தூரன், பேராசிரியர் க.வெள்ளைவாரணனார், பண்டிதர் க.அயோத்திதாசர், ஆபிரகாம் பண்டிதர், சதாவதானி செ‌ய்குத்தம்பி பாவலர், டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை ஆகிய அறிஞர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு, இச்சான்றோர்களின் மரபுரிமையர்களுக்கு தலா பத்து லட்சம் ரூபா‌ய் வீதம் பரிவுத் தொகை வழங்கப்படும்.

இதேபோ‌ல் மகாவித்வான் ரா.ராகவையங்கார், உடுமலை நாராயண கவி, கு.மு.அண்ணல் தங்கோ, திரு.அவ்வை தி.க.சண்முகம், திரு.விந்தன், லா.ச.ராமாமிர்தம், திரு.வல்லிக்கண்ணன், திரு.நா.வானமாமலை, கவிஞர் புதுவைச் சிவம், அ.இராகவன், தொ.மு.சி.ரகுநாதன், சக்திதாசன் சுப்பிரமணியன், டாக்டர் ந.சஞ்சீவி, முல்லை முத்தையா, கவிஞர் எஸ்.டி.சுந்தரம், கவிஞர் மீரா,
பேராசிரியர் ஆ.கார்மேகக் கோனார், புலவர் முகமது நயினார் மரைக்காயர், சு.சமுத்திரம், கோவை இளஞ்சேரன், பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் ஆகிய தமிழறிஞர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு, இச்சான்றோர்களின் மரபுரிமையர்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபா‌ய் வீதம் பரிவுத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணா‌நி‌தி இன்று ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணையின் பயனாக, நாட்டுடைமையாக்கப்படும் படைப்புகளை அளித்துள்ள 27 தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு மொத்தம் ஒரு கோடியே 65 லட்ச ரூபா‌யபரிவுத் தொகையாக வழங்கப்படுகிறது எ‌ன்று தெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்