மணல் விற்பனை உத்தரவை திரும்ப பெறவே‌ண்டும்: ஜெயலலிதா!

புதன், 21 மே 2008 (13:08 IST)
மண‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர்களு‌க்கு அ‌திகார‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம் அர‌சி‌ன் உ‌த்தரவை உடனடியாக ‌திரு‌ம்ப‌ப் பெ‌ற வே‌ண்டு‌ம் எ‌ன்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2003 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த படி ஆற்று மணல் குவாரிகளில் இருந்து மணலை எடுத்து விற்பனை செய்வதை ஒப்பந்தப் புள்ளி மற்றும் பகிரங்க ஏலம் மூலம் நடத்துவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கி ஒப்படைப்பதென்றும், இந்த மாற்று ஏற்பாடு ூலை மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தி.மு.க. அரசு அறிவித்திருப்பது எரிகிற கொள்ளியில் எண் ணெய் ஊற்றினார் போல உள்ளது.

தற்போதைய அறிவிப்பின் மூலம் பயன் பெறப் போகிறவர்கள் தி.மு.க.வினர் தான். இப்போது ஒரு லோடு மணல் 5,000 ரூபாயில் இருந்து 5,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒப்பந்தப் புள்ளி மூலமும், பகிரங்க ஏலம் மூலமும் மணலை எடுத்து தனியார் விற்பனை செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் அனைத்து மணல் குவாரிகளிலும் தி.மு.க.வினரே மணலை எடுத்து விற்பனை செய்யக் கூடிய நிலைமை தான் ஏற்படப் போகிறது.

அதே சமயத்தில், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், மணலின் விலை மேலும் பன்மடங்கு உயர வாய்ப்பு இருக்கிறது. மணல் கொள்ளையை ஊக்குவிக்கக் கூடிய, மணல் விலையை மேலும் உயர்த்தக் கூடிய, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படக்கூடிய செயலை செய்திருக்கும் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலன், நாட்டு நலனை முன்னிட்டு இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்