ல‌ஞ்ச ஒ‌ழி‌ப்பு இய‌க்குனராக இரு‌ந்த உபா‌த்‌தியாயா மா‌ற்ற‌ம்!

புதன், 21 மே 2008 (09:56 IST)
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குநர் எஸ்.கே.உபாத்தியாயா அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, எஸ்.கே.உபாத்தியாயா இடையேயான தொலைபேசி உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சென்னை லஞ்ச ஒழிப்பு இயக்குனராக காவ‌ல்துறை பயிற்சி டி.ஜி.பி. கே.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது லஞ்ச ஒழிப்பு இயக்குனராக இருக்கும் எஸ்.கே.உபாத்தியாய் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு எந்த பதவி என்பது குறிப்பிடப்படவில்லை.

இற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.மாலதி பிறப்பித்துள்ளார்.

உளவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பதவிக்கும், சென்னை நகர கூடுதல் காவ‌ல்துறை ஆணைய‌ர் பதவிக்கும் யாரும் நியமிக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்