3 நாள் சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதி வீடு திரும்பினார்!
திங்கள், 19 மே 2008 (09:18 IST)
முதுகு, கழுத்துவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் கருணாநிதி நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
கழுத்து வலி, முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வந்த முதல்வர் கருணாநிதி கடந்த 16ஆம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சை காரணமாக முதலமைச்சரின் கழுத்து, முதுகுவலி பிரச்சினை தீர்ந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் வீட்டுக்குச் செல்லலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, அவர் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
அப்போது, முதல்வரின் ராஜாத்தி அம்மாள், அவரது மகள் கனிமொழி, மத்திய அமைச்சர் ராசா, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர்.
கோபாலபுரம் இல்லத்திற்கு வந்த கருணாநிதியை, பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.