த‌மி‌ழ்நாடு ஒ‌ளி‌ர்‌கிறது, த‌மிழ‌‌ர்க‌ள் ஒ‌ளிர‌வி‌‌ல்லை: ராமதாஸ்!

புதன், 7 மே 2008 (14:46 IST)
''தமிழ்நாடு ஒளிர்கிறது. ஆனால், தமிழர்கள் ஒளிரவில்லை'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் கூறியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் நடைப‌ெ‌ற்ற தமிழ்நாடு சான்றோர் பேரவை தொடக்க விழா‌வி‌ல் பா.ம.க. நிறுவன‌ர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகை‌யி‌ல், ‌சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 25 ‌விழு‌க்கா‌ட்டை சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு கொடுக்க வேண்டும். தற்போது 11-வது ஐந்தாண்டு திட்டம் போடப்பட்டுள்ளது. ஆனால், இப்போதுள்ள நிலையில் விவசாயி `நான் வாழ வேண்டுமா? சாக வேண்டுமா?' என்று கேட்கிறான். விவசாயம் லாபகரமாக இல்லை. இலவச கலர் டி.வி. கொடுப்பதை நிறுத்திவிட்டு, இலவசமாக விதை கொடுங்கள் என்று நான் கூறினால் அரசு கோபப்படும். ஆனால், இதை இந்த பேரவை சொல்லலாம்.

கடந்த 10 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் எவ்வளவு பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை வெள்ளை அறிக்கை ஒன்றின் மூலம் தமிழக அரசு வெளியிட வேண்டும். சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் வேலை பார்பவர்களில் எத்தனை பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

தற்போது சாராயம், குடி, புகை போன்றவை தான் வளர்ந்துள்ளது. தென்மாவட்டங்களில் பீடி சுற்றும் தொழிலில் குழந்தைகள், பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு மாற்று திட்டம் வேண்டும். தமிழ்நாடு ஒளிர்கிறது. ஆனால், தமிழர்கள் ஒளிரவில்லை. 28 ‌விழு‌க்காடு பேர் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர். இவர்கள் தினமும் ஒருவேளை உணவுதான் சாப்பிடுகின்றனர்.

இலவசம் என்னும் நிலை தொடரக்கூடாது. அதற்கு பதிலாக குழந்தைகளுக்கு கட்டாய கல்வி, தரமான கல்வி, கட்டணமில்லாத கல்வி, தொழிற்கல்வியை கொண்டுவர அரசு முன்வரவேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்