சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் கோலாலம்பூர் பயணியிடமிருந்து ரூ.5கோடி மதிப்புள்ள 5 கிலோ போதைப் பொருளை சுங்கத்துறையினர் இன்று கைப்பற்றினர்.
டெல்லியிலிருந்து சென்னை வந்த கோலாலம்பூரை சேர்ந்த புன்ஷகான் (37) என்ற பெண் தாய்லாந்து செல்லும் விமானத்தில் செல்வதற்காக காத்திருந்தார்.
அப்போது, விமான நிலையத்தில் இருந்து போதை பொருள் கடத்தப்படுவதாக சுங்கத் துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து விமான நிலையம் விரைந்து வந்தனர் சுங்கத்துறையினர். அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுக் கொண்டிருந்த புன்ஷகானை பிடித்து சுங்கத்துறையினர் சோதனை செய்தனர்.