மு‌த்துராம‌லி‌ங்க‌த் தேவ‌ர் ‌சிலை அவம‌தி‌ப்பு: மதுரை‌யி‌ல் பத‌ற்ற‌‌ம்!

திங்கள், 21 ஏப்ரல் 2008 (15:28 IST)
மதுரை‌யி‌ல் மு‌த்துராம‌லி‌ங்க‌த் தே‌வ‌ர் ‌சிலை ‌‌மீது ‌சில ‌விஷ‌மி‌ங்க‌ள் சாண‌த்தை ‌வீ‌சி அவம‌தி‌ப்பு செ‌ய்து‌ள்ளதா‌ல் அ‌‌ங்கு பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌‌ட்டு‌ள்ளது.

மதுரை கோ‌ரிபாளைய‌த்‌தி‌ல் உ‌ள்ள மு‌த்துராம‌லி‌ங்க‌த் தேவ‌ர் ‌சிலை ‌‌மீது நே‌ற்று இரவு யாரே ‌சில ‌விஷ‌மிக‌‌ள் சாண‌த்தை ‌வீ‌சியு‌ள்ளன‌ர். இதனை க‌ண்டி‌‌த்து தே‌வ‌‌ர் அமை‌‌ப்‌பின‌‌ர் இ‌ன்று சாலை ம‌றிய‌ல் செ‌ய்தன‌ர். இதனா‌ல் போ‌க்குவர‌‌‌த்து கடுமையாக பா‌‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்த வ‌‌‌ழியாக வ‌ந்த லா‌ரி, இர‌ண்டு பேரு‌ந்துகளை போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள் தா‌க்‌கின‌ர். தக‌வ‌ல் அ‌றி‌ந்து காவ‌ல்துறை‌யின‌ர் அ‌ங்கு ‌விரை‌ந்து வ‌ந்தன‌ர். அவ‌ர்க‌ள் வேறு பாதை‌யி‌ல் வாக‌ன‌ங்களை ‌திரு‌ப்‌பி ‌வி‌ட்டு போ‌க்குவர‌த்தை ச‌ரி செ‌ய்தன‌ர்.

அ‌ங்கு தொட‌ர்‌‌ந்து பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மேலு‌ம் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள தேவ‌ர் இன ம‌க்க‌ள் வ‌‌சி‌க்கு‌ம் ஊ‌ர்க‌ளி‌ல் பாதுகா‌ப்பு போட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது தொட‌ர்பாக காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப்ப‌திவு செ‌ய்து ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்