அமைச்சருட‌ன் அ.இ.அ.தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் வா‌க்குவாத‌ம்!

வியாழன், 10 ஏப்ரல் 2008 (15:31 IST)
அ.இ.அ.‌தி.மு.க. ‌பிரமுக‌ரா‌ல் கையக‌ப்ப‌‌ட்ட மதுரா‌ந்த‌க‌‌‌ம் கோ‌யி‌ல் ‌நில‌ம் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் மூல‌ம் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டது எ‌ன்று அமை‌ச்ச‌ர் கூ‌றியதா‌ல் அ.இ.அ.‌தி.மு.க.- ‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ளிடையே கடு‌ம் வா‌க்குவா‌த‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் காயத்ரி தேவி, மதுராந்தகம் ஏரி காத்தராமர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் பெரியகருப்பன், "நீதிமன்றத்தின் மூலம் மதுராந்தகம் பகுதியில் 20 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டதாகவும், அது யாரிடம் இருந்து மீட்கப்பட்டது என்பது பற்றியும் கூறினார்.

இதற்கு அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள், நிலம் வைத்திருந்தவரின் பெயரை குறிப்பிடக்கூடாது எ‌ன்று‌ம் அவர் சார்ந்த கட்சியின் பெய ரையும் தெரிவிக்கக்கூடாது எ‌ன்று‌ம் கேள்வி நேரத்தின்போது யார் மீதும் குற்றச்சாட்டு கூறக் கூடாது எ‌ன்று‌ம் கூ‌றின‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள், அமைச்சர் குறிப்பிட்ட பெயரை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் எழுப்‌பின‌ர். இதற்கு ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்களும் பதிலுக்கு குரல் எழு‌ப்‌பின‌ர். இதனால் அவை‌யி‌ல் கூச்சல் ஏற்பட்டது.

இதை‌த்தொட‌ர்‌ந்து அமைச்சர்கள் அன்பழகன் எழுந்து குறிப்பிட்ட பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அவை‌த் தலைவ‌ர் ஆவுடையப்பன், அமைச்சர் குறிப்பிட்ட பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்