சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எண்ணிக்கை 44 ஆனது!
செவ்வாய், 25 மார்ச் 2008 (09:35 IST)
சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆர்.சுப்பையாவுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் சேர்த்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக வழக்கறிஞர் ஆர்.சுப்பையாவை, குடியரசுத் தலைவர் சமீபத்தில் நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இவரது பதவி ஏற்பு விழா சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 5 நீதிபதிகளுக்கான காலியிடங்கள் உள்ளன.
புதிய நீதிபதி ஆர்.சுப்பையாவை அட்வகேட் ஜெனரல் ஜி.மாசிலாமணி, வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், பார் அசோசியேஷன் தலைவர் டி.வி.ராமானுஜன், பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கே.சாந்தகுமாரி, லா அசோசியேஷன் சார்பில் செல்வராஜ் ஆகியோர் பாராட்டி பேசினர்.