அடு‌த்த ஆ‌ண்டு முத‌ல் பி.ஏ., பி.எஸ்சி. படித்துக்கொண்டே பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிக்கலாம்!

வியாழன், 13 மார்ச் 2008 (10:27 IST)
''கலை அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். படித்துக்கொண்டே பாலிடெக்னிக்கில் படித்து டிப்ளமோ வாங்கலாம்'' என்று அமைச்சர் பொன்முடி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌‌த்தஉயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், தமிழ்நாட்டில் உயர் கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் அரசு கல்லூரிகளில் ஷிப்டு முறை கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக இரு மடங்கு மாணவர்கள் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆங்கில பேச்சாற்றலை வளர்க்க பயிற்சி கூடம் தொடங்கப்பட்டு வருகிறது.

சாதாரணமாக பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். படித்தால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைப்பது கடினம். அதனால் கூடுதலாக கம்ப்யூட்டர் பாடம் அல்லது ஏதாவது சான்றிதழ் படிப்பை ஐ.டி.ஐ.யில் படிக்கலாம். எனவே கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் பட்டப்படிப்பை படித்துக்கொண்டே ஐ.டி.ஐ.யில் சான்றிதழ் படிப்பு படிக்கலாம். அல்லது பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிப்பை படிக்கலாம்.

உதாரணமாக பி.எஸ்சி. கணிதம் படிக்கும் ஒரு மாணவர் பாலிடெக்னிக்கில் சேர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தால் அவர் படித்து முடித்தவுடன் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். இன்று கம்ப்யூட்டர் இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம்.

அதே போல வேலை வாய்ப்புக்கு ஏற்ற வகையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பம் உள்ள படிப்பை எடுத்து படித்து சிறந்த முறையில் முன்னேறலாம். தமிழ்நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது எ‌ன்றஅமை‌ச்ச‌ரபொ‌ன்முடி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்