ப‌ட்ஜெ‌ட்டி‌ல் அ‌றி‌வி‌த்தது பழைய ர‌யி‌ல்க‌ள் அ‌ல்ல: ஆர்.வேலு!

வெள்ளி, 7 மார்ச் 2008 (11:24 IST)
''பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது பழைய ரயில்கள் அல்ல. தவறான தகவல்களை நம்ப வேண்டாம்' என்று மத்திய ரயில்வே இணை அமை‌ச்ச‌ர் ஆர்.வேலு கூ‌றினார்.

ம‌த்‌‌திர‌யி‌ல்வஇணஅமை‌ச்ச‌ரஆ‌ர்.வேலசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், ரயில்வே திட்டங்களில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படவில்லை. நெல்லை- தென்காசி அகல ரயில்பாதை அமைக்கும் பணி, தென்காசி- செங்கோட்டை- புனலூர் வழித்தடங்கள், கடற்கரையோரமாக, சென்னையில் இருந்து புதுச்சேரி, காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வழியாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வரை ரயில்பாதை வழித்தடம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் இருந்து மதுரை வரை ரயில்களை மின் மயமாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் புதிய திட்டத்திற்கான சர்வே, 2 வழி ரயில்பாதை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எந்த வகையிலும் வடமாவட்டங்கள், தென்மாவட்டங்கள் என்று பிரித்து பேச இடமே இல்லை.

இதே போல் பட்ஜெட்டில் பழைய ரயில்களைத்தான் அறிவிப்பாக வெளியிட்டுள்ளதாக சிலர் கூறுகிறார்கள். சென்னை- சேலம் ரயிலை விருத்தாசலம் வரை நீட்டித்துள்ளோம். நெல்லை வழியாக திருச்செந்தூருக்கும், பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரிக்கும், சேலம் வரை உள்ள ரயிலை நாகர்கோவிலுக்கும் இயக்குவது எல்லாம் பழைய ரயில்களா? பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது பழைய ரயில்கள் அல்ல. தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எ‌ன்று வேலு கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்