நாளை முத‌ல் பிளஸ்-2 தேர்வுக‌ள்

ஞாயிறு, 2 மார்ச் 2008 (12:16 IST)
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை 6,60,000 மாண‌க்க‌ர் எழுதுகிறார்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு நாளதொடங்குகிறது. இந்த தேர்வு 24-ந் தேதி முடிவடைகிறது.

மாணா‌க்க‌ர் தே‌ர்வு எழுத வச‌தியாக த‌மிழக‌ம் முழுவது‌ம் 1,650 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை‌யி‌ல் ம‌ட்டு‌ம் 45,891 மாணா‌க்க‌ர் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள். இ‌தி‌ல் 20,506 பேர் மாணவர்கள். 25,385 பேர் மாணவிகள். இவர்களுக்காக 135 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்வு அட்டவணை

பிளஸ்-2 தேர்வு கால அட்டவணை வருமாறு :

மார்ச் 3-ந் தேதி - தமிழ் முதல் தாள்

4-ந் தேதி - தமிழ் 2-வது தாள்

5-ந் தேதி - மனநல இயல், சுருக்கெழுத்து

6-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்

7-ந் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்

8-ந் தேதி - தட்டச்சு தமிழ், ஆங்கிலம்

10-ந் தேதி - இயற்பியல், வணிகவியல்

11-ந் தேதி - புவியியல்

12-ந் தேதி - வர்த்தக கணிதம்

கணிதம்

13-ந் தேதி - வேதியியல்

14-ந் தேதி - கணக்கு பதிவியல்

15-ந் தேதி - மனை அறிவியல், மைக்ரோ பயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, நர்சிங், நிïட்ரிஷன் மற்றும் டயட்டீக்ஸ்

17-ந் தேதி - கணிதம், விலங்கியல்

18-ந் தேதி - பொருளாதாரம், சித்த மருத்துவம்

19-ந் தேதி - அனைத்து தொழில் பாடங்களுக்கான தேர்வுகள்

20-ந் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு

22-ந் தேதி - அரசியல் அறிவியல், அடிப்படை அறிவியல், இந்திய கலாசாரம்

24-ந் தேதி - கம்பïட்டர் சயின்ஸ், சிறப்பு தமிழ், கமïனிகேட்டிவ் இங்கிலீஷ், புள்ளியியல்

மெட்ரிகுலேஷன்

இதேபோல் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் வருகிற 25-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 27-ந் தேதியும் தொடங்குகின்றன.

சென்னை மாவட்டத்தில் மெட்ரிகுலேஷன், எஸ்.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளை 221 மையங்களில் 56 ஆயிரத்து 622 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த வருடம் வினாக்களை படித்துப் பார்க்க தனியாக 10 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் பத‌ற்றம் இன்றி கேள்விகளை வாசித்து பார்த்து சரியான விடையை எழுதவேண்டும் என்றும் தேர்வுத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்