கடலோர பகுதிகளில் மழை பெய்யலாம்!

சனி, 1 மார்ச் 2008 (16:04 IST)
மேகங்களை ஆய்வு செய்து தற்போதைய வானிலை கணிப்பின்படி இரண்டு அல்லது மூன்று தினங்களில் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழை குறித்து ஆய்வு செய்து வரும் ராஜ் கூறியுள்ளார்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மார்ச் மாதம் 7, 12, 20 ஆகிய தேதிகள் மிதமானது முதல் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

“பிப்ரவரி மாதம் வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் பிப்ரவரி 14, 21, 26 ஆகிய தேதிகளில் மிதமான அல்லது பலத்த நிலநடுக்கம் ஏற்படும் தேதிகள் என குறிப்பிட்டிருந்தேன். அதேபோல், பிப்ரவரி 14, 20, 25 ஆம் தேதி முறையே 6.8, 7.5, 7.2 ரிக்டர் அளவுகளில் இந்தோனேசியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெப்துனியாவிற்கு அனுப்பிய குறிப்பிட்ட பெரும்பாலான தேதிகளில் பிப்ரவரி 4 மற்றும் 4 ஆம் தேதிகளிலும், 9 முதல் 16 ஆம் தேதி வரையிலும் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்துள்ளத” மழை ராஜ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்