ம‌த்‌திய அரசை எ‌தி‌ர்‌த்து‌ப் போரா‌ட்ட‌‌ம்: ஹ‌ி‌ந்து மு‌ன்ன‌ணி!

சனி, 1 மார்ச் 2008 (14:45 IST)
"ராமர் பாலத்தை உடைத்து தான் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ம‌த்‌திய அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக தீவிர பிரசாரம் நடத்த‌ப்படு‌ம்" எ‌ன்று ஹ‌ி‌ந்து மு‌ன்ன‌ணி அமை‌ப்பு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌த்து அ‌ந்த அமை‌ப்‌பி‌ன் மாநிலத் தலைவர் ராமகோபாலன் விடுத்துள்ள அறிக்கையில், "ராமேசுவரம் ராமர் பாலத்தை உடைத்துதான் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் காங்கிரசும் வேறு சக்திகளும் கை கோர்த்துக் கொண்டு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம், "4 ஆண்டுகளுக்கு முன்னர் `ஸ்ரீராம நவமி' அன்று ஒரே நாளில் 35 லட்சம் ராம பக்தர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு அப்போதைய குடியரசு‌த் தலைவ‌ர் அப்துல் கலாமிடம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து எண்ணற்ற போராட்டங்கள் நடந்திருக்கின்றன.

இதையடு‌த்து 2007-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி நாடு முழுவதும் இருந்து 10 லட்சம் ராம பக்தர்கள் டெல்லியில் நடந்த பேரணியில் பங்கேற்று ராமர் பாலத்தை உடைக்கக்கூடாது என்று ஒரே குரலில் தீர்மானித்தார்கள்.

இ‌ந்‌நிலை‌‌யி‌ல், காங்கிரஸ் அரசு இந்த ராமர் பாலத்தை இடிக்க துணிந்திருப்பது கோடான கோடி ராமர் பக்தர்களுக்கு சவால் விடுவதாகும்.

"ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா அல்லது தானாக உருவானதா என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் எதுவும் இல்லை. ராமர் பாலத்தை உடைப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும்'' என்று புதிய பிரமாண பத்திரத்தில் அரசு கூறியுள்ளதாக தெரிகிறது.

ராமர் பாலத்தை உடைத்து‌த்தான் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இவர்கள் எடுத்திருக்கும் முடிவுக்கு எதிராக தீவிர பிரசாரம் நடத்தி வர‌விருக்கும் தேர்தலில் இவர்களை படுதோல்வி அடைய‌ச் செய்ய வேண்டும். இவர்களை வீட்டுக்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை" எ‌ன்று‌ம் ராமகோபாலன் தனது அ‌றி‌க்கை‌யி‌ல் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்