ஜெயலலிதா மீது உரிமை மீறல் பிரச்சனை: அவை‌த் தலைவ‌ர்!

சனி, 2 பிப்ரவரி 2008 (11:01 IST)
தவறான தகவல்களை அவைக்கு கொடுத்ததற்காக, எ‌தி‌‌ர்‌க்க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ஜெயலலிதா மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்படும் என்று அவை‌த் தலைவ‌ர் ஆவுடையப்பன் தெரிவித்து‌ள்ளார்.

இதுகுறி‌த்து அவ‌ர் நே‌ற்று‌ச் சட்ட‌ப் பேரவை‌க் கூட்டம் முடிந்ததும் செய‌‌தியாள‌ர்க‌யிட‌ம் கூறுகை‌யி‌ல், "சட்ட‌ப் பேரவையி‌ல் எதிர்க்கட்சி‌த் தலைவர் ஜெயல‌லிதா உரையாற்றும்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஒருபகுதியை மட்டும் அதாவது, அவருக்கு சாதகமான ஒரு பகுதியை மட்டும் வாசித்தார்.

அவையையும், அவை உறுப்பினர்களையும் திசை திருப்பும் நோக்கத்துடனு‌ம், முதலமைச்சர் மீது ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடனு‌ம், அவைக்கு தவறான தகவலை தந்துள்ளார்.

அவர் அளித்தது தவறான தகவல் என்று பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் அவையில் விளக்கம் அளித்தார். இப்பிரச்சனை குறித்து அவை முடிந்தவுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் என்னிடம் ஒரு அறிக்கையை அளித்தார்.

இப்பிரச்சனையை மேல் எழுந்த வாரியாக பார்க்கும்போது அதில் அவை உரிமை மீறல் இருப்பதாக தெரிவதால், இது குறித்து ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்காக பேரவை விதி 226-ன் கீழ் அவை உரிமை குழுவுக்கு அனுப்ப உள்ளேன்.

ஏற்கனவே அவர் மீது 2 உரிமை மீறல் பிரச்சனை உள்ளது. இது 3-வது உரிமை மீறல் பிரச்சனையாகும் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது" எ‌ன்றா‌ர்.

ஜெயலலிதாவுக்கு தா‌க்‌‌கீது அனுப்பப்படுமா எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, இது ப‌ற்‌றி உ‌ரிமை ‌மீற‌ல் குழு முடிவு செ‌ய்யு‌ம் எ‌ன்றா‌ர் ஆவுடையப்பன்.

வெப்துனியாவைப் படிக்கவும்