ரே‌ஷ‌னி‌ல் 20 கிலோ அரிசி வழங்கா‌வி‌ட்டா‌ல் நடவடிக்கை: எ.வ.வேலு!

புதன், 30 ஜனவரி 2008 (10:51 IST)
''‌நியாய‌விலை‌க் கடைகளில் 20 கிலோ அரிசி வழங்கவில்லை என்றால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமைச்சர் எ.வ.வேலு கூ‌றினா‌ர்.

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் ஆளுந‌ர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் லீமாரோஸ் (மார்க்சிஸ்ட் கம்யூட.): குமரி மாவட்டத்தில் ‌நியாய‌விலை‌க் கடைகளில் பருப்பு வகைகள் சரியாக வழங்குவதில்லை. இதனை தொடர்ந்து வழங்க வேண்டும் எ‌ன்று கூ‌றினா‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகை‌யி‌ல், அந்தந்த மாவட்ட தேவையை அறிந்து அதற்கேற்பதான் பருப்பு உள்பட ரேஷன் பொருட்கள் வழங்கி வருகிறோம். இவை தொடர்ந்து வழங்கப்படும் எ‌ன்றா‌ர்.

ம.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் ஞானதாஸ் பேசுகை‌யி‌ல், ரேஷன் அரிசி முழு அளவு வழங்காமல் 40 ‌விழு‌க்காடு தான் வழங்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

அமைச்சர் வேலு ப‌தி‌ல‌ளி‌‌க்கை‌யி‌ல், 40 ‌விழு‌க்காடு தான் அரிசி வழங்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு எதுவும் போடவில்லை. 100 ‌விழு‌க்காடு வழங்கப்படுகிறது. ‌நியாய‌ விலை‌க் கடைகளில் 20 கிலோ அரிசி தரமறுத்தால் பொது மக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலமோ அல்லது பேக்ஸ் மூலமோ புகார் செய்யலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்றா‌ர்.

அ.‌இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் செங்கோட்டையன், கோபிசெட்டிப்பாளையத்தில் 10 கிலோ அரிசி தான் வழங்குகிறார்கள் எ‌ன்றா‌ர்.

அமைச்சர் வேலு, அனைவருக்கும் தேவையான அரிசி ஒதுக்கப்படுகிறது. 20 கிலோ அரிசி வழங்காத விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்