திம்பம் மலைப்பகுதியில் கடும் மூடுபனி

செவ்வாய், 29 ஜனவரி 2008 (15:04 IST)
webdunia photoWD
சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பகுதியில் கடும் மூடுபனி ஏற்பட்டுள்ளதால் ஓ‌ட்டுந‌ர்க‌ள் வாகனங்களை இயக்க ‌சிரம‌ப்படு‌கி‌ன்றன‌ர்.

ஈரோடு மாவட்டம் ச‌த்தியமங்கலம் பண்ணாரி அடுத்துள்ளது திம்பம் மலைப்பகுதி. கடல் மட்டத்தில் இருந்து ஆயிரத்து 105 மீட்டர் உயரமுள்ள திம்பம் மலைப்பகுதி சுற்றிலும் வனப்பகுதிகளை கொண்டது.

திம்பம் வழியாகத்தான் தாளவாடி மற்றும் கர்நாடகா மாநிலம் கொள்ளேகால், மைசூர்,பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்லமுடியும். ஆகவே இந்த மலைப்பகுதியில் வழக்கமாக குளிர் அதிகமாக இருக்கும்.

நேற்று மற்றும் இன்று காலை திம்பம் மலைப்பகுதியில் கடுமையான மூடுபனி நிலவியது. ஓ‌ட்டுந‌ர்க‌ள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். வாகனங்களும் ஊர்ந்து ஆமைவேகத்தில் சென்றன.

சனூர் பகுதியிலும் இந்த மூடுபனி நிலவியது. நேற்று காலை 7 மணிக்கு லேசாக மழைதூறலு‌ம் விழுந்தது. ூறலுக்கு பின்தான் திடீரென மூடுபனி ஏற்பட்டது. இந்த மூடுபனியால் பேரு‌ந்து ஓ‌ட்டுந‌ர்க‌ள் திண்டாடினாலும், பேரு‌ந்து பயணிகள் மூடுபனியை பார்த்து ரசித்து மகிழ்வது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்