சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம்: கருணாநிதி!

வியாழன், 17 ஜனவரி 2008 (10:05 IST)
''சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது. தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், சான்றோர்கள், மற்றும் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகளையும், நிதி உதவியையும் முதலமைச்சர் கருணாநிதி வழங்கி பேசுகை‌‌யி‌ல், தியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம். பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன். அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்க‌ர் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.

நான் இதிலே அம்பேத்கரை ஒரு ஜாதிக்குள்ளே புகுத்த விரும்பவில்லை. ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர் அந்த சமூகத்தினுடைய விழிப்புணர்வுக்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கர் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கர் என்பதை யாரும் மறந்து விட முடியாது. நாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் யாரும், தலித்துகளை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு அம்பேத்கர் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்பித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

நல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கமïனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் இல்லை. ன்பது பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருது தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.

பத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதலச்சர் கொடுக்கிறாரே என்ற அந்த மரியாதைக்காக அவர்கள் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அது பத்தாத பணம் தான் அவர்களுக்கு என்பது எனக்கு தெரியும். னவே அடுத்த ஆண்டு முதல் அல்ல-இந்த ஆண்டே கூட இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதை நூலாசிரியர்களுக்கு மாத்திரமல்லாமல், பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளாவது இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்