மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளராக என்.வரதராஜன் 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு மதுரையில் கடந்த 8ஆம் தேதி துவங்கி 3 நாள் நடந்தது. மாநாட்டின் நிறைவு நாளான நேற்று புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மாநில செயலாளராக என் வரதராஜன் 3-வது முறையாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
என்.வரதராஜன், என்.சங்கரய்யா, டி.கே.ரெங்கராஜன், பாப்பாஉமாநாத், லட்சுமணன், ஏ.கே.பத்மநாபன், வே.மீனாட்சிசுந்தரம், ஜி.ராமகிருஷ்ணன், அ.சவுந்தரராஜன், பி.சம்பத், கே.தங்கவேல், ப.செல்வசிங், கே.பாலகிருஷ்ணன், எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், ஜே.ஹேமசந்திரன், உ.வாசுகி, என்.சீனிவாசன் உள்ளிட்ட 79 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. கோவையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டிற்கு பிரதிநிதிகளாக 49 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.