த‌னியா‌ர் அ‌திப‌ர்க‌ள் ‌சிமெ‌ன்‌ட் ‌விலையை குறை‌க்காவ‌ி‌ட்டா‌ல் நாட‌்டுடமை : த‌மிழக அரசு!

Webdunia

புதன், 2 ஜனவரி 2008 (17:40 IST)
தனியார் சிமெ‌ன்ட் அதிபர்கள் தங்கள் விலையைக் குறைத்துக் கொள்ள முன் வரவில்லை என்றால், பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்திலே உள்ள தனியார் சிமெ‌‌ன்ட் தொழிற் சாலைகளை அரசே நாட்டுடைமையாக்கிட நடவடிக்கையெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று த‌மிழக அரசு கூ‌றியு‌ள்ளது.

தமிழக அரசு இ‌ன்றவெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், பொதுமக்கள் பாதிக்காத அளவிற்கு சில்லறை விலையில் சிமெ‌ன்ட்டை வழங்குவது குறித்து இன்று (2.1.2008) காலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி, கனிம வளத்துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், உணவுத்துறை செயலாளர், தமிழ்நாடு சிமெ‌ன்ட் நிறுவனத் தலைவர், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோருடன் விவாதித்தார்.

த‌் ‌பி‌னஎடு‌க்க‌‌ப்ப‌ட்முடி‌வி‌ல், உடனடியாக ஒரு லட்சம் டன் சிமெ‌ன்டை மத்திய அரசின் கனிமப்பொருட்கள் மற்றும் உலோகங்கள் வணிகக் கழகம் (எம்.எம்.டிசி.) மூலம் அரசு நிறுவனமான டான்செம் இறக்குமதி செய்வதற்கான ஆணையை இன்றைய தினமே பிறப்பிப்பது என்றும், இவ்வாறு இறக்குமதி செய்யப் படும் சிமெ‌ன்டை தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் 200-க்கு மேற்பட்ட மாவட்ட மற்றும் வட்டங்களில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைத்து நேரடியாக நுகர்வோருக்கு அடக்க விலையில் லாபம் ஏதுமின்றி விற்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் டான்செம் தேவைக் கேற்ப நேரடி ஒப்பந்தப்புள்ளி மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஏற்பாட்டினை விரைவு படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் உடனடியாக எடுக்க வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கெல்லாம் பிறகு தனியார் சிமெ‌‌ன்ட் அதிபர்கள் தங்கள் விலையைக் குறைத்துக் கொள்ள முன் வரவில்லை என்றால், பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்திலே உள்ள தனியார் சிமெ‌ன்ட் தொழிற் சாலைகளை அரசே நாட்டுடைமையாக்கிட நடவடிக்கையெடுப்பதைத் தவிர வேறு வழியில்லைஎன்றும் இந்தக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது எ‌ன்றகூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்