இது குறித்துத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் சுதர்சனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை சுதந்திர தினவிழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வற்புறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற தீவிர முயற்சி எடுத்து இந்தியா- இலங்கை உடன்பாட்டை ஏற்படுத்தினார். இதனால் தனியாக தமிழ் மாநிலம் உருவானதுடன், தமிழ் ஆட்சி மொழி என்ற நிலையையும் பெற்றது. இந்த உரிமைகளை பெற்று கொடுத்த ராஜீவ் காந்தியையே விடுதலைப் புலிகள் கொன்றனர்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு எந்த நிலையை எடுக்கிறதோ அதே நிலையை தமிழக அரசும் எடுக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இதனால், மத்தியில் மன்மோகன் சிங் ஆட்சி அமைய அக்கறை காட்டி ஒத்துழைத்த கி.வீரமணி தனது போராட்டத்தை கைவிட வேண்டும்.