கன மழையா‌‌ல் டெல்டா மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் மூழ்கியது!

Webdunia

வெள்ளி, 21 டிசம்பர் 2007 (09:57 IST)
மூ‌ன்று நா‌ட்களாக ‌விடாம‌ல் பெ‌ய்த கன மழையா‌ல் டெல்டா மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் மூழ்கின.

வங்கக்கடலில் இலங்கை அருகே தோன்றிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 3 நாட்களாக விடாமல் மழை பெ‌ய்ததா‌ல் அனைத்து ஏரி, கால்வாய்களும் நிரம்பியது. திருவையாறு கோட்டத்தில் மட்டும் 1,000 ஏக்கர் பயிர் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. கருங்குளம் அருகில் 2 இடத்தில் காட்டாற்றில் உடைப்பு ஏற்பட்டதா‌ல் நெற்பயிர்க‌ள் மூழ்கி ‌கிட‌க்‌கிறது.

ஒரத்தநாட்டில் வேளாண் கோட்டத்துக்கு உட்பட்ட பொன்னாப்பூர், தலையாமங்கலம், சின்னபொன்னாப்பூர், பருத்திக்கோட்டை, உத்தாங்கரை உட்பட பல கிராமங்களில் 12 ஆயிரம் எக்டேருக்கு மேல் சம்பா நடவு செய்யப்பட்டிருந்தது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த அப்பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 45 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கரும் சம்பா, தாளடி பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. மழை மேலும் நீடித்தால் இந்த பயிர்கள் அனைத்தும் அழுகி சேதமடையும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்