இது தொடர்பாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளரும், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளருமான சந்தனகுமார் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அக்டோபர் 11ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் தாக்கப்பட்டார்.
இதில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் எஸ்.ரஜினிகாந்த், பொதுச் செயலாளர் ஸ்ரீகண்டன் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே இவர்கள் வகித்து வரும் பதவிகளில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.