முத‌ல்வ‌ர் ப‌ரி‌சீலனை‌யி‌ல் மருத்துவ மாணவர்கள் பிரச்சினை: மு.க.ஸ்டாலின்!

Webdunia

வெள்ளி, 23 நவம்பர் 2007 (10:19 IST)
''மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினை முதலமைச்சரின் பரிசீலனையில் உள்ளது'' என்று உ‌ள்ளா‌ட்‌சி‌த் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மதுரை மாநகராட்சியில் 40 மயான உதவியாளர்கள், 23 மின் பணியாளர்கள் ஆகியோருக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்டரங்கில் நேற்று நடந்தது. பணி நியமன உத்தரவுகளை உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் பல்வேறு தரப்பினர் அமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். விழாவுக்கு பின்னர் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உங்களை சந்தித்து இந்த பிரச்சனையில் மாநில அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கோரியுள்ளனரே என செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், மதுரையில் என்னை சந்தித்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனு கொடுத்தனர். அது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது பரிசீலனையில் உள்ளது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்