மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 91வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் கருணாநிதி, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் தேசிய ஒருமைப்பாடு உறுதி மொழியை அவர் வாசித்தார். அதை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள், திரும்ப சொல்லி தேசிய ஒருமைப்பாடு உறுதி மொழி எடுத்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் பங்கேற்றன.