ஒரு டன் கரும்புக்கு பரிந்துரை விலை ரூ.1,034: கருணாநிதி!

Webdunia

சனி, 17 நவம்பர் 2007 (17:38 IST)
9 ‌விழு‌க்காடு சர்க்கரை கட்டுமானமுள்ள ஒரு டன் கரும்பின் பரிந்துரை விலையை ரூ.1,034-ஆக உயர்த்தி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், 2007-08ஆம் அரவைப் பருவத்தில் 9 ‌விழு‌க்காடு சர்க்கரை கட்டுமானமுள்ள ஒரு டன் கரும்புக்கு ரூ.811.80 என்று மத்திய அரசு குறைந்தபட்ச விலையாக நிர்ணயம் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட தி.மு.க. அரசு, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச விலையை விடக் கூடுதலாக ரூ.222.20 உயர்த்தி, 9 ‌விழு‌க்காடு சர்க்கரை கட்டுமானம் உள்ள ஒரு டன் கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ.1,034 என்று நிர்ணயம் செய்து அறிவிக்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு 1.10.2007 முதல் தொடங்கியுள்ள நடப்புக் கரும்பாண்டில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கும் பொருந்துமாறு முன்தேதியிட்டு வழங்கப்படும். மேலும் 9 ‌விழு‌‌க்காடு சர்க்கரை கட்டுமானத்துக்குக் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 0.1 ‌விழு‌க்காடு சர்க்கரை கட்டுமானத்துக்கும் டன் ஒன்றுக்கு ரூ.9 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது எ‌ன்று முதலமை‌ச்‌ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்