இது குறித்த புகார்கள் தினம் தினம் காவல் நிலையத்துக்கு வந்து கொண்டே இருக்கின்றன. இதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மக்கள் கூட்டம் அதிகமுள்ள தெருக்களிலும், துணிக் கடைகள் முன்பும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது தவிர பெண் காவலர்கள் மாறு வேடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் கோபுரம் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே தீபாவளி திருட்டை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் பிக்பாக்கெட் திருடர்களின் படங்களை சென்னையில் முக்கிய இடங்களில் விளம்பர பலகை போல வைக்கும் புதிய ஏற்பாட்டை சென்னை காவல் செய்துள்ளது.
ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார், புரசைவாக்கம், முக்கிய இடங்களில் உள்ள திரையரங்குகள் உள்பட 50 இடங்களில் திருடர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளது. சாலை தடுப்புச் சுவர்கள், துணிக் கடைகள் முன்பும் திருடர்களின் படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.
இந்த புகைப்படங்களில் இருக்கும் திருடர்களை கூட்டங்களில் யாராவது பார்க்க நேர்ந்தால் அருகில் உள்ள காவலர்களிடம் தெரிவிக்கலாம் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.