முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது கொண்டுவந்த உரிமை மீறலை உரிமைக் குழுவிற்கு அனுப்ப அவைத் தலைவர் உத்தரவிட்டதை எதிர்த்து ரகளையில் ஈடுபட்ட அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் இத்தொடர் முடியும் வரை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் எழுந்து கூச்சலிட்டனர். அவையின் நடுப்பகுதிக்கு வந்து அவைத் தலைவரிடம் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
அவர் மேஜை முன்பு கூடியிருந்த அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் அவைத் தலைவரின் அருகில் இருந்த காவலரின் தொப்பியைப் பிடுங்கி அவர் மீது எறிந்தனர்.
பின்னர் இந்நிகழ்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி, ' இது ஒரு வெறுக்கத்தக்க நிகழ்வு' என்றார்.