சட்டப் பேரவை தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டம் வரும் 17ஆம் தேதி கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கிறது.
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வரும் 17ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி தலைமை வகிக்கிறார் என்று சட்டப் பேரவையின் அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
வரும் 17ஆம் தேதி காலை தொடங்கும் சட்டப் பேரவையின் குறுகிய கால கூட்டத் தொடரின்போது அவையில் செயல்பட வேண்டிய விதம் பிரச்சனைகளை அணுக வேண்டிய முறை, எதிர்க்கட்சிகளின் வாக்கு வாதங்களையும் காரசாரமான விமர்சனங்களையும் எதிர்க்கொள்ள வேண்டிய விதம் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப் படுகிறது.