காந்தி சிலைக்கு ஆளுனர், கருணாநிதி அஞ்சலி!
Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2007 (14:55 IST)
சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுனர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 139வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுனர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், பரிதி இளம் வழுதி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஜி.கே.வாசன், சரத்குமார், விஜய டி.ராஜேந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காந்தி பிறந்தநாளையொட்டி சர்வதேச வன்முறையற்ற தினமாக கொண்டாடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இதேபோல் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.