1ஆம் தேதி மதுக்கடை திறந்திருக்கும் : டாஸ்மாக் அறிவிப்பு!

Webdunia

சனி, 29 செப்டம்பர் 2007 (12:58 IST)
வரும் 1ஆம் தேதி முழு அடைப்பின்போது அரசு மதுப்பான கடைகள் திறந்திருக்கும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மங்கத்ராம் சர்மா கூறினார்.

சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி வரும் 1ஆம் தேதி ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தை தி.மு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. அன்று கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், மளிகை கடைகள் அடைக்கப்படுகின்றன. லாரி, ஆட்டோ ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசு மதுக்கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் 2ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) கடைகள் மூடப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மங்கத்ராம் சர்மா கூறியுள்ளார்.

டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைத்த பிறகு விற்பனை பெரிதாக பாதிக்க வில்லை. மது விற்பனை கூட வாய்ப்பு இல்லை. ஒரு விழுக்காடு குறைந்துள்ளது. அதுவும் ஒரு மாதம் குறையும், மற்றொரு மாதம் சமமாக இருக்கும் என்றார் மங்கத்ராம் சர்மா.

ஒரு மாதத்திற்கு 26 லட்சம் மதுப் பெட்டிகள் விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் காலியாக இருக்கும் பணி இடங்களுக்கு அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மங்கத்ராம் சர்மா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்