புதுக்கோட்டையில் 5வது கட்டமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச நிலம், வீட்டுமனை பட்டாக்களை முதல்வர் கருணாநிதி இன்று வழங்கிறார் என்று முதலமைச்சர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை நிலமற்ற ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஐந்தாவது கட்டடாக இலவச நிலம் மற்றும் இலவச மனைப் பட்டா வழங்குகிறார்.
மாலை 6 மணிக்கு திருச்சி 'கலைஞர்அறிவாலயம்' மற்றும் தி.மு.க. மாவட்ட அலுவலக அடிக்கல் நாட்டு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் முதல்வர் கருணாநிதி.
நாளை காலை 10 மணிக்கு வல்லம், தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் தொடக்க விழா மற்றும் மாலை 4 மணி உழவர் சந்தை மைதானம், திருச்சி மாநகராட்சி குடிநீர் விரிவாக்க திட்டம், வளர்ச்சி பணிகள் அடிக்கல் நாட்டு விழா.