பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Webdunia

சனி, 22 செப்டம்பர் 2007 (13:07 IST)
பெரியாறஅணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொட‌ர்‌ந்து மழை பெய்து வருவதா‌ல் அணை‌‌‌க்கு ‌நீ‌ர்வர‌த்து அ‌திகமாக வரு‌கிறது.

பெரியாறஅணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனாலஅணையின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. கடந்த 19ஆ‌ம் தேதி 123.80 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 127.70 அடியாக உயர்ந்தது.

இந்நிலையில் மழையும், நீர்வரத்தும் தொடர்ந்து கொண்டே இருப்பதால் இன்று மாலைக்குள் பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைகை அணையில் இருந்து மேலூர், திருமங்கலம் முதல்போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் சில தினங்களாக உய‌ர்‌ந்து கொ‌ண்டிரு‌ந்த ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் த‌ற்போது குறையத் தொடங்கி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்