மாணவ‌ர்க‌ள் கே‌மிரா செ‌‌ல்போ‌ன் பய‌ன்படு‌த்த தடை...

Webdunia

வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (15:48 IST)
மாணவ-மாண‌விக‌ள் கே‌மிரா செ‌ல்போ‌ன் பய‌ன்படு‌த்த தடை ‌வி‌தி‌க்க கோ‌ரி அரசு‌க்கு ப‌ரி‌ந்துரை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன ‌சி.‌பி.‌சி.ஐ.டி. ‌திரு‌ட்டு ‌வீடியோ தடு‌ப்பு ‌பி‌ரிவு டி.ஐ.‌ஜி. ஆறுமுக‌ம் கூ‌றினா‌ர்.

ஆபாச பட‌ங்க‌ள் அனு‌ப்புவ‌ர்க‌‌ள் மற‌்று‌ம் தயா‌ரி‌ப்பவ‌ர்களை த‌ண்டி‌ப்பத‌ற்கு கடுமையான நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம். அத‌ற்கு இ‌ப்போது‌ள்ள ச‌ட்ட‌‌ங்க‌ள் போதாது. எனவே ச‌ட்ட‌ங்க‌ளி‌ல் ‌திரு‌த்த‌ம் கொ‌ண்டு வர வே‌ண்டு‌‌‌ம் எ‌ன்று செ‌ன்னை மாநகர காவ‌‌ல்துறை ஆணையரு‌க்கு கோ‌‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளோ‌‌ம் எ‌ன டி.ஐ.‌ஜி. ஆறுமுக‌‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரி மாணவ-மாண‌விக‌ள் கே‌மிரா செ‌ல்போ‌ன் கொ‌ண்டு வர தடை ‌வி‌தி‌க்க வே‌ண்டு‌ம். அ‌‌ப்போதுதா‌ன் மாணவ‌ர் சமுதாய‌ம் ‌சீர‌ழியாம‌ல் தடு‌க்க முடியு‌ம் எ‌ன்று அரசு‌க்கு ப‌ரி‌ந்துரை அனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

பெ‌ற்றோ‌ர்க‌ளு‌ம் த‌ங்க‌ள் குழ‌ந்தைகளு‌க்கு கே‌மிரா செ‌‌ல்போ‌ன் வா‌ங்‌கி கொடு‌த்து ஊ‌க்க‌ப்படு‌‌த்துவதை த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று டி.ஜ.‌‌ஜி. ஆறுமுக‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்