டைட்டானியம் திட்டம் : ஓரிரு நாளில் முடிவு - தமிழக காங்கிரஸ்!

Webdunia

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2007 (19:33 IST)
டைட்டானியம்-டைஆக்சைடு திட்டம் குறித்து ஓரிரு நாளில் முடிவு எடுத்து தங்கள் நிலையை தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம் தெரிவிக்கவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் எம். கிருஷ்ணசாமி கூறியுள்ளார்!

சத்தியமூர்த்தி பவனில் இன்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் டி. சுதர்சனத்துடன், டைட்டானியம் தொழிற்சாலை குறித்து அப்பகுதி மக்களிடையே கருத்து கேட்டறிந்த குழுவுடன் எம். கிருஷ்ணசாமி ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தி்ற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, டைட்டானியம் திட்டம் குறித்து மக்களிடையே சில இடங்களில் ஆதரவும், சில இடங்களில் எதிர்ப்பும் உள்ளது என்றும், குழு அளித்த அறிக்கையின் மீது இதன் மீது ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்பட்டு, தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலையை முதலமைச்சர் கருணாநிதியிடம் அறிக்கையாக அளிக்கவுள்ளதாகவும் கூறினார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ரூ.2,500 கோடியில் அமைக்கப்படவுள்ள டாட்டா ஸ்டீல் நிறுவனத்துடன் தமிழக அரசு செய்துகொண்ட டைட்டானியம் - டைஆக்சைடு தொழிற்சாலை திட்டம் பல தரப்பின் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்