ஆலைகளில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தல்

Webdunia

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2007 (10:36 IST)
ஈரோடு பகுதியில் மாசுபடுத்தும் ஆலைகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முழுவதையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்டத்திலபல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த அமைப்பினர் ஈரோடு மாவட்ஆட்சியர் உதயச்சந்திரனை சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில், ஈரோடு மாவட்டத்தில் நிலம், நீர், காற்று இவைகளை மாசுபடுத்தும் ஆலைகளை மூடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பொது நல அமைப்பு சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் அனைத்து ஆலைகளும் ஒரு சொட்டு கழிவு கூட வெளியேற்ற கூடாது.

அனுமதியற்ற தோல், சாய, சலவை பட்டறைகளை மூட வேண்டும். சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மூன்று மாதம் அவகாசமும், அந்த மூன்று மாதத்துக்கு வெளியேற்றப்படும் கழிவு நீர் லிட்டர் ஒன்றுக்கு 6 பைசா வீதம் அபராதம் விதிக்கப்படும். உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கலெக்டர் எஸ்.பி., பொதுப்பணித்துறை பொறியாளர், மாசுகட்டுபாட்டு மாவட்ட பொறியாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.

அவர்கள் நால்வரும் தீர்ப்பை அமல்படுத்தி உயர்நீதிமன்றத்துக்கு அறிக்கை தர வேண்டும். அனைத்து ஆலைகளும் குறிப்பிட்ட அளவு டெபாசிட் தொகையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆறு, கால்வாய் இதர நீர் ஆதாரங்களில் "பைப் லைன்' அமைத்து கழிவு நீரை விட்டு கொண்டு உள்ள ஆலைகளின் "பைப் லைன்' அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கை தீர்ப்பில் உள்ளது. இந்த தீர்ப்பை முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமஎன்று கோரிக்கை வைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்