தேசிய கீதம் : ஏ.ஆர். ரஹ்மான் மீது அவமதிப்பு வழக்கு

Webdunia

வியாழன், 23 ஆகஸ்ட் 2007 (18:19 IST)
தேசிய கீத பாடலில் விதிமுறை மீறப்பட்டுள்ளதாக ஏ.ஆர். ரஹ்மான் உட்பட 4 பேர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு.

நாட்டின் 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏர்டெல் நிறுவனமும், மும்பையில் உள்ள பாரத்பாலா புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தேசிய கீதம் பாடலை சி.டி. மற்றும் டிவிடிக்களில் வெளியிட்டுள்ளன.

இது தேசிய கீதம் பாடலை எப்படி பாட வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலாளர், ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில்மிட்டல், பாரத் பாலா நிறுவனத் தலைவர் கனிகா, ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை நாளை அறிவிப்பதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்