காலம் நெருங்குகிறது என்று கருணாநிதி கூறியுள்ளது என்னை மிகவும் பாதித்துள்ளது. மனம் கொதித்து போய் இருக்கிறேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், 14.8.2007 ல் காலம் நெருங்குகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கவிரும்பவில்லை. ஆனால் அதற்கு கருணாநிதி காரணம் கூறியிருப்பது என்னை மிகவும் பாதித்துள்ளது. மனம் கொதித்து போய் இருக்கிறேன்.
சில அரசியல் கட்சிகள் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எதையும் பேசலாம், எத்தகைய அராஜக போராட்டத்தையும் நடத்தலாம் என்ற நிலை வளர்ந்துவிட்ட சூழலில வ்ன்முறையற்ற அமைதி, நட்புறவு, உணர்வுகளுக்கு நாம் மதிப்பு கொடுப்பதனாலேயே மட்டுமே நாட்டை காடாக்கும் நாகரீகமற்ற முறைகளுக்கு கைலாகு கொடுப்பவர்கள் என்ற குற்றத்துக்கு நாமும் ஆளாகி விடுவதா என்பது?
மத்தியில் ஆளும் கட்சியின் பல கொள்கைகளுக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். போராட்டம் நடத்துகின்றனர். அதுபோல தமிழகத்திலும் நிலவுகிறது.
பாமகவும், இடதுசாரிகளும் தங்களது செயல் திட்டங்கள், கொள்கைகளுக்கு ஏற்ப கருத்து வெளியிடவும் அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டங்களையும் நடத்துகிறோம்.
மத்தியில் நடப்பது போல இங்கு கருத்து வேறுபாடுகளை போக்கவோ, பிரச்சினைகளை பேசி விளக்கம் அளிக்கவோ முயற்சி செய்யவில்லை.
டாடாவின் டைட்டானியம் தொழிற்சாலை அமைவதால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதைவிட பல ஆயிரம் பேரின் வேலையை கெடுக்கும் என்பதே சரி.
இப்போதும், எப்போதும் சொல்கிறோம். எங்களால் இந்த ஆட்சிக்கு பாதிப்பு வராது. தமிழ்நாட்டில் என்னதான் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என முதல்வர் கூறியுள்ளார் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.