மேட்டூர் அணை நீர் வரத்து குறைந்தது!

Webdunia

செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (15:42 IST)
நொடிக்கு ஒன்றரை லட்சம் கன அடி வரை அதிகரித்து காவிரியில் பெரும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்திய மேட்டூர் அணை நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி 50,000 கன அடியாக குறைந்தது!

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வந்துக் கொண்டிருக்கும் நீர்வரத்து 49,000 கன அடியாகும். அணியின் நீர்மட்டம் அதன் அதிகபட்ச நீர்த்தேக்க அளவான 120 அடியை விட அதிகமாக 121.87 அடியாக உயர்ந்திருப்பதால், அணையின் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 67,000 கன அடியாக உள்ளது.

இதனால், காவிரியில் வெள்ளம் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடுகிறது.

கொள்ளிடம் வழியாக நொடிக்கு 1 லட்சத்து 3,814 கன அடி வீதம் உபரி நீர் கடலிற்கு திறந்துவிடப்படுகிறது.

கல்லணையில் இருந்து 9,528 கன அடி நீர் காவிரியிலும், அதே அளவிற்கு வெண்ணாற்றிலும், 3,500 கன அடி நீர் கல்லணைக் கால்வாயிலும் திறந்துவிடப்படுவதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்