ஸ்ரீலங்காவில் அமைதி நிலவ வாய்ப்பே இல்லை : ரணில் விக்கரமசிங்கே

Webdunia

ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2007 (14:05 IST)
ஸ்ரீலங்காவில் அமைதியான சூழ்நிலை நிலவ வாய்ப்பே இல்லை என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்கே தெரிவித்துள்ளார்.

டெல்லி செல்லும் வழியில் சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார்.

ஸ்ரீலங்காவில் தற்போது ஏராளமான பிரச்சனைகள் நிலவி வருவதாகவும், மக்களின் வாழ்க்கை தரம், பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக அதிபர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், நார்வே குழுவின் அமைதி பேச்சுவார்த்தை குறித்து அதிபரிடம் கேட்டறிய வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்