மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு : 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 90,000 ஆயிரம் முதல், 1,00,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் வரத்து அதிகரித்திருப்பதால அணையின் முழு கொள்ளவான 120 அடியை அணை எட்டியுள்ளது.

இதனால், டெல்லா பகுதிகளில் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்