தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் : நாளை மறுநாள் வரும்

Webdunia

திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (17:26 IST)
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வருகிற புதன் கிழமை தமிழக எல்லைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டலேறு அணையில் இருந்து கடந்த 3 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் 1,000 கன அடிவீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர், தற்போது 6,000 கனஅடி வீதம் திறந்து விடப்படுகிறது.

கிருஷ்ணா நீர் மூன்றாவது நாளாக இன்று 90 கி.மீ பயணம் செய்து வருகிற புதன் கிழமை காலை ( 08 - 08 - 07 ) தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூண்டி ஏரிக்கு வியாழக்கிழமை கிருஷ்ணா தண்ணீர் வரும் என்றும், அதன் பிறகு புழல் ஏரிக்கு தண்ணீர் விடப்பட்டு அங்கிருந்து சென்னை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று பொதுப் பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்