சட்டப்படிப்பு கலந்தாய்வு தொடக்கம் : இடமாறுதல் கிடையாது

Webdunia

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2007 (16:37 IST)
சட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. கலந்தாய்வை தொடங்கி வைத்த அமைச்சர் துரைமுருகன் இந்தாண்டு முதல் சட்டப்படிப்பு மாணவர்களுக்கான இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் பல்கலைக் கழக வளாகத்தில் இன்று தொடங்கியது.

கலந்தாய்வை தொடங்கி வைத்த அமைச்சர் துரைமுருகன் அதற்கான ஆணையை மாணவர்களிடம் வழங்கினார். பின்னர் பேசிய அவர், மாணவர்கள் விருப்பப்பட்டு தான் கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்வு செய்கின்றனர் என்றும், ஆனால் கல்லூரியில் சேர்ந்த பின்னர் அந்த கல்லூரி பிடிக்காமல் வேறு கல்லூரி கேட்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

மாணவர்கள் இடமாறுதல் கேட்பதை தவிர்க்க இடமாறுதலை ரத்து செய்து உத்தரவிடப்பட்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார். வழக்கறிஞர்களுக்கு கடமை உணர்வு மிகவும் தேவை என்று குறிப்பிட்ட அவர், சட்டம் படிப்பதை விட கேட்பது தான் அதிக அனுபவம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்