கோவை தொடர் குண்டு வெடிப்பு : எஸ்.ஏ.பாஷா உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள்

Webdunia

புதன், 1 ஆகஸ்ட் 2007 (17:53 IST)
1998 ஆம் ஆண்டு நடந்த கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாஷா உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என கோவை தனி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி மீதான, குண்டு வெடிப்பிற்கு சதித்திட்டம் தீட்டியது, வெடிபெருட்கள் வாங்கி தந்து உதவியது உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் நிரூப்பிக்கப்படவில்லை என்று நீதிபதி உத்திராபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

கோவையில் கடந்த 1998 பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தர். இந்த தொடர் குண்டு வெடிப்பில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தனியார், பொதுச் சொத்துக்குகள் சேதமடைந்தன.

கோவை தொடர் குண்டு வழக்கில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ. பாஷா, பொதுச் செயாலாளர் முகமது அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்பட 168 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு 9 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாஷா உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என கோவை தனி நீதிமன்ற நீதிபதி உத்திராபதி இன்று தீர்ப்பளித்தார்.

அல் உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ. பாஷா மீதான சதித் திட்டம் தீட்டியது, குண்டு வெடிப்பை நடத்துவதற்கு உதவியது ஆகிய இரண்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்தார்.

அல் உம்மா இயக்கத்தின் பொதுச் செயலர் மொஹம்மது அன்சாரி உள்ளிட்ட மற்ற 150 பேருக்கும் எதிரான, ஒன்று கூடி சதித் திட்டம் தீட்டியது, அதனை நிறைவேற்றியது, சமூக இணக்கத்தை தகர்த்தது, வெடிபொருட்கள் சட்டம் ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கே.உத்திராபதி தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் 14வது குற்றவாளியாக குற்றப்பதிவு செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் அப்துல் நாசர் மதானிக்கு எதிரான 5 குற்றங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி உத்திராபதி தீர்ப்பளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்