மதுரை மேற்கு தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக கே.எஸ்.கே.ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மேற்கு தொகுதிக்கு வருகிற 26 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாளை வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதிமுக சார்பில் செல்லூர் ராஜூம், தேமுதிக சார்பில் சிவ முத்துக்குமாரும், பாரதீய ஜனதா சார்பில் சசிராமனும் போட்டியிடுகின்றனர்.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து மனுக்கள் பெற்று, நேர்காணல் நடத்தி 9 பேரை கட்சியின் தலைமைக்கு அனுப்பியது.
அதில் கே.எஸ்.கே.ராஜேந்திரனை வேட்பாளராக சோனியா காந்தி தேர்வு செய்தார். இதற்கான உத்தரவு டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து, ராஜேந்திரன் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.