பெண்கள், குழந்தைகளுக்கு ஹெல்மட் விதிவிலக்கு

Webdunia

திங்கள், 4 ஜூன் 2007 (17:15 IST)
இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களில் பின்னால் அமர்ந்து செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஹெல்மட் அணிவது என்பது அவர்களின் விருப்பம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சியில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் அவர்கள் பின்னே அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, வாகனங்களில் பின்னே செல்லும் பெண்கள், குழந்தைகள் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் இடையூறுகளைப் பற்றி ஏராளமான புகார்கள் அரசுக்கு வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹெல்மட் அணிந்து கொள்வதை வாகனங்களின் பின்னே அமர்ந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் விருப்பத்திற்கு விட்டு விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்