பாகிஸ்தான் வீரர் அக்தர் பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக இந்திய கிரிக்கெட் சங்கத்திடம் வீரர்கள் புகார் கூறி உள்ளனர்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் பந்தை எறிவதாக ஏற்கனவே புகார்கள் கூறப்பட்டன. அவருடைய பந்து வீச்சு குறித்து சர்வேதச கிரிக்கெட் பேரவை விசாரணை நடத்தியது. முடிவில் சோயிப் அக்தர் பந்து வீச்சு சரியானது தான் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் பந்து வீச்சு முறை குறித்து இந்தியா வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 5 ஒரு நாள் போட்டிகளிலும் அதன் பிறகு முதல் டெஸ்ட் போட்டியிலும் அக்தர் பந்து வீசினார். அப்போது அவர் பந்தை எறிவது போல இருந்தது. இது பற்றி இந்திய வீரர்கள் இந்திய கிரிக்கெட் சங்கத்திடம் புகார் கூறி உள்ளனர்.
இதில் நடுவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதால் வீரர்கள், இந்திய கிரிக்கெட் சங்கத்திடம் கூறி சர்வதேச கிரிக்கெட் சங்கத்திடம் புகார் கொடுக்கும்படி கூறி உள்ளனர்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் சங்க செயலாளர் நிரஞ்சன்ஷா கூறுகையில், சோயிப் அக்தர் பந்து வீச்சு பற்றி இந்திய வீரர்கள் தங்களுடைய சந்தேகத்தை கூறி உள்ளனர். விதிமுறைகளை மீறியே அவருடைய பந்து வீச்சு இருக்கிறது. இது பற்றி நாங்கள் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் புகார் செய்வோம் என்று கூறினார்.