இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேச கிரிக்கெட் கழகத்தின் தலைவராக நீடிப்பதா? அல்லது இந்திய கிரிக்கெட் லீக் உடன் இருப்பதா என்பதனை கபில் தேவ் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது!
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் நிரஞ்சன் ஷா, ஒரே நேரத்தில் இரண்டு அமைப்புகளிலும் ஒருவர் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளாது என்றும், இந்திய கிரிக்கெட் லீக் உடன் தொடர்புடைய எந்த வீரரும் இந்திய அணியில் இடம்பெற முடியாது என்றும் நிரஞ்சன் ஷா கூறியுள்ளார்.
எந்த மாநிலத்தின் கிரிக்கெட் சங்கமாவது ஐ.சி.எல். உடன் தொடர்பு வைத்திருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிரிக்கெட் வாரியச் செயலர் நிரஞ்சன் ஷா கூறியுள்ளார். (யு.என்.ஐ.)